தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அதிகாலையில் விற்பனை செய்ய வைத்திருந்த பழங்களை அடாவடியாக எடுக்க சொன்னா பெரியகுளம் நகராட்சி:

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அதிகாலையில் விற்பனை செய்ய வைத்திருந்த பழங்களை அடாவடியாக எடுக்க சொன்னா பெரியகுளம் நகராட்சி


" alt="" aria-hidden="true" />


 தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று காலை சுமார் 7 மணியளவில்   பழங்கள் விற்பனைக்காக வைத்திருந்தனர்.


 பெரியகுளத்தில் இருந்து ஊருக்கு அவுட்டர் பகுதியான பெரியகுளம் வடுகபட்டி சாலையில் உள்ள ஒரு மரத்தடியில் வயதான பெண்மணி பழம் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.


 அப்போது அந்த வழியாக வந்த பெரியகுளம் நகராட்சி அலுவலர் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து பழங்களை எடுக்கச் சொல்லியும் எடுக்க வில்லை தூக்கி விசிறி  விடவா என்று சொல்லி அந்தக் கடையை அப்புறப்படுத்தினார்கள்.


 இதற்கு சக பத்திரிகை யாளர் அவர்களிடம் மதியம் 12 மணி வரை கடை வைக்க அனுமதி உள்ளதா   என்று கேட்டதற்கு அதெல்லாம் கிடையாது கடைய மொத்தத்தில் வைக்கக்கூடாது என்று அடியாட்கள் பேசுவதுபோல் சொல்லிவிட்டனர்.


 ஏற்கனவே தமிழக முதல்வர் சிறிது நேரம்  அளவிற்கு கடைகள் வைத்துக் கொள்ளலாம் என்று சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 முதல்வர் அறிக்கை பெரியகுளம் நகராட்சிக்கு தெரியுமா தெரியாதா என்று பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


 இதேபோல சம்பவங்கள் பெரியகுளம் பகுதியில் இது போன்ற சம்பவங்கள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


 மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Popular posts